முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

மாதிரி படம்

மாதிரி படம்

Local Body by-election : தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 510 இடங்களுக்கு கடந்த 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், கிராமப்புறங்களில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 498 இடங்களுக்கும், நகர்ப்புறங்களில் 12 பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

அதிமுக சார்பில் வேட்பாளர்களுக்கான படிவம் ஏ மற்றும் பி-யை அதிமுக தலைமை வழங்காததால், சுயேச்சையாக போட்டியிட்டனர். இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் தொடங்கி எண்ணப்படுகின்றன.

Must Read : அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம்? ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு நேரில் ஆஜராக நோட்டீஸ்

அதனைத் தொடர்ந்து, விரைந்து முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

First published:

Tags: Election Commission, Local Body Election 2022