• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக - கேரள எல்லையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக புகார்: ட்ரோன் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு!

தமிழக - கேரள எல்லையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக புகார்: ட்ரோன் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு!

கேரளா - தமிழக எல்லையில் போலீசார் தீவிர சோதனை

கேரளா - தமிழக எல்லையில் போலீசார் தீவிர சோதனை

மதுக்கடைகள் திறக்காத நிலையில் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளது.

  • Share this:
    தமிழக - கேரள எல்லையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக புகார் எழுந்த நிலையில், ட்ரோன் கேமரா மூலம் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மலை அடிவாரப் பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுகிறதா என்பதை மதுவிலக்கு போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர்.

    தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. நோய்த்தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டத்திற்கு மட்டும் தமிழக அரசு ஊரடங்கை சில தளர்வுகளுடன் அனுமதித்தது இன்று முதல் மதுபானக் கடைகளை திறக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

    மேலும் நோய்த்தொற்றுகள் அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு மீண்டும் அதே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் திறக்காத நிலையில் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனால் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெறுவதாக தெரியவந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த தமிழக கேரள எல்லைப் பகுதியான செமணாம்பதி வனப்பகுதி அருகே கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக பொள்ளாச்சி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் தலைமையில் ஆய்வாளர் பாலமுருகன், எஸ்.ஐக்கள் சின்னக் காமணன் உள்ளிட்ட  போலீசார் அடங்கிய தனிப்படையினர் செமணாம்பதி பகுதியில் உள்ள வனப்பகுதியில் ட்டோன் கேமிரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சபடவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் வேற எங்காவது கள்ளச் சாராயம் காய்ச்ச படுகிறதா என மதுவிலக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டும் மாறுவேடத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    செய்தியாளர் - ம.சக்திவேல்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: