• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆயுதப்படை காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனை

ஆயுதப்படை காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனை

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ஆயுதப்படை காவலர்களின் மன அழுத்தத்தை போக்க, உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது.

  • Share this:
சென்னை காவல் துறையில் 1500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனச் சோதனை உள்ளிட்ட களப்பணியில் ஈடுபடுத்தப்படும் ஆயுதப் படை காவலர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதால், அவர்களுக்கு உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பகுதி பகுதியாக இந்த ஆலோசனை வழங்கப்படுகிறது.

Also read... கொல்காத்தா டூ சென்னை - ரயில் மூலம் வெளிநாட்டு பறவைகள், குரங்குகள் கடத்தல்

புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதானத்தில் முதற்கட்டமாக 200 போலீசாருக்கு உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. கிங்க் இன்ஸ்ட்யூட் உளவியல் நிபுணர் மகாலஷ்மி, சித்த மருத்துவர் மூலம் மன நல ஆலோசனையும், வாழும் கலை அமைப்பு மூலம் யோக பயிற்சியும் வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: