அத்திவரதர் வைபோகத்தின் போது நடந்த முறைகேடுகள்.. நடவடிக்கை எடுக்குமா புதிய அரசு?

அத்திவரதர் வைபோகத்தின்போது நடந்த முறைகேடுகள், நடவடிக்கை எடுக்குமா புதிய அரசு?

அத்திவரதர் வைபோகத்தின்போது நடந்த முறைகேடுகள் குறித்து புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • Share this:
2019ஆம் ஆண்டு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் அத்தி வரதர் சிறப்பு வைபவம் நடைபெற்றது.

வரதராஜ கோவில் குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு கட்சி தந்தார் அத்திவரதர். ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் என, ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 18 வரை சுமார் ஒரு கோடி மக்கள் கோவிலுக்கு வந்தகாக மாவட்ட நிர்வாகம் கூறியது, மக்கள் கூட்டம் அதிகரித்ததால் சாதா டிக்கெட், சிறப்பு டிக்கெட், விஐபி பாஸ், விவிஐபி பாஸ் என பல பாசுகளும் விற்கப்பட்டன.

ஆனால் இந்த வைபவத்தின் போது, பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து சில பேர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்களை திரட்டவும் முயன்றனர். அப்படி RTI மூலமாக கேட்டு வந்த பதில்கள் ஒவ்வொன்றும் முன்னுக்கு பின் முரணாகவே உள்ளது.

ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 18 வரை நடந்த அத்தி வரதர் வைபோகத்தில் எத்தனை நபர்கள் கலந்து கொண்டனர் என்று கேட்ட கேள்விக்கு 1 கோடியே ஏழு ஆயிரம் என்று நவம்பர் 2020 லும், 88 லட்சத்து 54 ஆயிரம் என்று பிப்ரவரி 2021-லும் வெவ்வேறு பதில்களை மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.மேலும் விஐபி பாஸ், விவிஐபி பாஸ் என்கிற பாஸே தாங்கள் வழங்கவில்லை என்று நவம்பர் 2021ல் பதில் அளித்துள்ளனர், ஆனால் சமீபத்தில் வந்த பதிலில் விஐபி பாஸ், விவிஐபி பாஸ் வழங்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பாஸ் விவகாரத்தில் தான் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த பாஸுக்கு அரசு நிர்ணயித்த விலை என்ன, எத்தனை பாஸுக்கு எவ்வளவு வருவாய் வந்தது என எந்த தகவலையும் மாவட்ட நிர்வாகம் கூற மறுக்கிறது எனவும் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் விற்கப்பட்ட டிக்கெட்டுகள் குறித்து சரியான தகவல் இல்லை, 2020 டிசம்பரில் கட்டண சேவை மற்றும் சிறப்பு சேவை கட்டணம் வாங்கிக்கொண்டு பக்தர்களை அனுமதிப்பதாக ஆர்.டி.ஐயில் கூறப்பட்ட நிலையில், பிப்ரவரி 2021 வழங்கப்பட்ட தகவலில், அரசு தரப்பில் டிக்கெட் ஏதும் அச்சிடக்கப்படவோ அல்லது விற்பனை செய்யப்படவோ இல்லை என முற்றிலும் மாறான ஒரு விஷயத்தை கொடுத்துள்ளது.

இவ்வளவு குழப்பங்களும், முரண்களும் இருக்கும் நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு இந்த விவாகரத்தில் நடவடிக்கை எடுக்குமா?
Published by:Esakki Raja
First published: