• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கே.சி.வீரமணி

கே.சி.வீரமணி

28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • Share this:
    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை முன்னாள் சட்டமன்ற அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.சி வீரமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பாத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தார்.

    இந்நிலையில், சென்னை, ஜோலார்பேட்டை ஆகிய இடங்களிலும்,  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள குருவிமலை கிராமத்தில் உள்ள கே.சி வீரமணி உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை சாந்தோமில் உள்ள கே.சி.வீரமணி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல, அதிமுக ஒன்றிய செயலாளர் கர்ணல் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுகிறது. வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் உள்ள இவருடைய இல்லத்தில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது இவர் கே.சி.வீரமணிக்கு பினாமி என்று கூறப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளியில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான நட்சத்திர விடுதியிலும், இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூக்கண்டப்பள்ளி பகுதியில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான நட்சத்திர விடுதி உள்ளது.

    முதல் தகவல் அறிக்கை


    இந்நிலையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், 2016-2021 ஆண்டு காலத்தில் வருமானத்தை விட 654% சதவீதம் அளவுக்கு சொத்து குவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Must Read : நேரடி வகுப்புக்கு வருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை : நீதிமன்றம் உத்தரவு

    மேலும், முறைகேடக அவர் பெயரிலும், அவரது 80 வயது தாய் பெயரிலும் சொத்துகளை சேர்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: