Home /News /tamil-nadu /

அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது 200 கோடி ரூபாய் ஊழல் புகார் - விசாரணைக் குழு அமைத்தது தமிழக அரசு

அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது 200 கோடி ரூபாய் ஊழல் புகார் - விசாரணைக் குழு அமைத்தது தமிழக அரசு

துணைவேந்தர் சூரப்பா.

துணைவேந்தர் சூரப்பா.

அண்ணாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா மீது 200 கோடி ரூபாய் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் தனிப்பிரிவில் அளித்த புகாரில், பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணை இயக்குநர் சக்திநாதன் ஆகியோர் தற்காலிக பேராசிரியர் நியமனத்தில் ஒவ்வொரு நபர்களிடமிருந்து 13 முதல் 15 இலட்ச ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு நியமனங்களைச் செய்ததாகவும் இதன் மூலம் இருவரும் 80 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்ததாகவும் இருவரும் இணைந்து 200 கோடி ரூபாய் அளவிற்கு பல்கலைக்கழகத்தில் ஊழல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

வரதராஜன் என்பவர் உயர்கல்வித் துறைக்கு அனுப்பிய புகாரில் தேர்வுத் துறையின் அலுவலக உதவியாளருக்கு பதவி உயர்வு அளிப்பதில் முறைகேடு நடந்ததாகக் குறிப்பிடப்பட்டது. இதுதவிர, அரியர் மாணவர்களுக்கு தமிழக அரசு தேர்ச்சி வழங்கிய விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு தவறான தகவல் அளித்து சூர்ப்பா கடிதம் அனுப்பியதாகவும், துணைவேந்தர் தனது மகளை அண்ணா பல்கலைக்கழக பொறுப்பில் நியமித்து உறுப்புக் கல்லூரிகளுக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும் புகார்கள் எழுந்தன.



சூரப்பா மீதான பல்வேறு முறைகேடு புகார்கள், விதி மீறல் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. மூன்று மாத காலத்திற்குள் அந்த விசாரணைக் குழு தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அரசு அமைக்கும் இந்த குழு அரசுக்கு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Published by:Rizwan
First published:

Tags: Anna University

அடுத்த செய்தி