விழுப்புரம் கிராமத்தில் இலவச கழிவறை கட்டும் திட்டத்தில் அதிகாரிகள் கோடிக்கணக்கில் ஊழல்!

இங்கு வசிக்கும் 126 குடும்பங்களுக்கு கழிவறை கட்டித் தருவதற்காக 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில், 26 வீடுகளில் மட்டுமே கழிவறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விழுப்புரம் கிராமத்தில் இலவச கழிவறை கட்டும் திட்டத்தில் அதிகாரிகள் கோடிக்கணக்கில் ஊழல்!
  • Share this:
திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமமாக மாற்றுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதிகாரிகள் கையாடல் செய்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

திறந்தவெளி கழிப்பிடமற்ற நாடாக மாற்றுவதற்காக அனைத்து வீடுகளுக்கும் இலவச கழிவறை கட்டும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.  உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டில் கழிவறை கட்டுவதற்கு மத்திய அரசு 7,200 ரூபாயையும், மாநில அரசு 4,800 ரூபாயையும் என மொத்தம் 12,000 நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சிகுட்பட்ட சண்டிசாட்சி கிராமத்தில் வசிக்கும் 126 வீடுகளிலும் கழிவறை கட்டித்தரப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆராய்வதற்காக நமது செய்தியாளர் குழு அந்த கிராமத்திற்கு சென்று கள ஆய்வு நடத்தியதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது.


இங்கு வசிக்கும் 126 குடும்பங்களுக்கு கழிவறை கட்டித் தருவதற்காக 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில், 26 வீடுகளில் மட்டுமே கழிவறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏறக்குறைய 10 லட்சம் ரூபாய் அளவுக்கு அதிகாரிகள் கையாடல் செய்திருப்பதும் தெரியவந்தது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பயனாளியின் பெயர், முகவரியை ஒப்பிட்டுப் பார்த்ததில் அந்த முகவரியில் வீடே இல்லை என்பதும், உயிரிழந்தவர்களின் பெயர்களில் கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டிருப்பதும் செய்தியாளர் குழுவிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.  சில பயனளிகளிடம் சொந்த செலவில் கழிவறை கட்டிவிட்டு பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு ஊராட்சி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி கடன் வாங்கி கழிவறை கட்டிய பின் அவர்களுக்கு உரிய தொகையை வழங்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

சண்டிசாட்சி கிராமத்தில் இலவச கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டதாக மத்திய, மாநில அரசுகளின் புள்ளி விவரங்களில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், இத்திட்டத்தில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாகவும் அந்த கிராமத்து இளைஞர் கார்த்திக் குற்றம்சாட்டினார். இதேபோன்று பல கிராமங்களில் இத்திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அரசின் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகாரிகளே கையாடல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.Also Watch

First published: October 16, 2019, 10:45 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading