ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் முதல்முறையாக நகர, மாநகரசபை கூட்டம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று குறை கேட்கிறார்?

தமிழகத்தில் முதல்முறையாக நகர, மாநகரசபை கூட்டம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று குறை கேட்கிறார்?

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்லாவரம் அருகே உ‌ள்ள பம்மல் 6வது வார்டு மாநகரசபை கூட்டத்தில் பங்கேற்று மக்கள் குறை கேட்கிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கிராமசபை கூட்டம் போல் தமிழகத்தில் முதல் முறையாக நவம்பர் 1-ம் தேதி முதல் நகர பகுதிகளில் நகரசபை, மாநகர சபை கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

  நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில்  தமிழகத்தில் உள்ள 12525 ஊராட்சிகளிலும் பொது மக்கள் பங்கேற்கும் கிராம சபை கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் கிராம சபை கூட்டங்களைபோல, தமிழ்நாட்டில் முதல்முறையாக நகரசபை, மாநகர சபை கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

  இதையும் படிங்க.. பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி : படிக்கட்டில் பயணம் செய்தபோது நேர்ந்த விபரீதம்!

  அதன்படி சென்னை பல்லாவரம் அருகே பம்மல் 6வது வார்டில் நவம்பர் 1ம் தேதி மாநகர சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்கள் குறை கேட்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

  அதேபோல ஒவ்வொரு வார்டுக்கு 9 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வார்டு கவுன்சிலர் தலைவராக இருந்து வருகிறார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வார்டிலும் குறைகேட்பு கூட்டத்தில் குறை கேட்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: CM MK Stalin, TN Govt