ஒரு பாஸுக்கு ரூ.2000: கால்டாக்ஸி ஓட்டுநர்களுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரி

கால்டாக்ஸி ஓட்டுநர்களுடன் இணைந்து ஒரு பாஸுக்கு ரூ.2000 வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஒரு பாஸுக்கு ரூ.2000: கால்டாக்ஸி ஓட்டுநர்களுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரி
இ-பாஸ்
  • Share this:
வீட்டிலிருந்தே பணி செய்வதன் மூலம் இ-பாஸ் மோசடியை மாநகராட்சி அதிகாரி பெரிய அளவில் அரங்கேற்றி இருப்பது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கும் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் அவசர தேவைக்காக செல்பவர்களுக்கு தமிழக அரசு இ-பாஸ் வழங்கி வருகிறது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் வந்ததன் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னையில் இ-பாஸ் வழங்கும் மாநகராட்சி அதிகாரியே கால் டாக்சி டிரைவர்களுடன் கூட்டு சேர்ந்து இ-பாசை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. சென்னை மாநகராட்சி இ-பாஸ் அதிகாரி குமரன், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக இளநிலை உதவியாளர் உதயகுமார் மற்றும் கார் ஓட்டுனர்கள் தேவேந்திரன், வினோத்குமார், மனோஜ்குமார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.


குமரன் முக்கிய குற்றவாளி என காவல்துறை கூறுகிறது. ஒரு இ-பாஸுக்கு ரூ. 2000 வீதம் 100 இ-பாஸ்கள் வரை போலியான  ஆவணங்களுக்கு அனுமதித்தது உள்ளிட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இ-பாஸ் வழங்குவதற்காக சென்னை மாநகராட்சியில் 40 வருவாய் ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனி குழு தொடங்கப்பட்டிருந்தது. அவர்கள் அலுவலகம் வரவேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் அளிக்கும் ஆவணங்களை வீட்டிலேயே இருந்தபடி சரிபார்த்து வழங்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.

அதற்காக தனி வாட்ஸ்அப் குரூப்பும் தொடங்கியுள்ளனர். கைதான அதிகாரி குமரனுக்கு கோவையில் உள்ள ஒரு அரசு அதிகாரியும் உடந்தையாக இருந்துள்ளார். வெளியூரில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு சென்னையில் இருந்துதான் இ-பாஸ் வழங்க வேண்டும்.
கோவையில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு அந்த அதிகாரி குமரனுக்கு அதிக அளவில் பணம் கொடுத்து இ-பாஸ் பெற்றுக் கொடுத்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த மோசடியில் மேலும் சில கால் டாக்சி டிரைவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading