கொரோனா சந்தேகமா...? சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்கள்

சென்னை மக்கள் கொரோனா தொடர்பான சந்தேகங்கள், உதவிகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மண்டல வாரியான கட்டுப்பாட்டு அறை எண்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கொரோனா சந்தேகமா...? சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்கள்
சென்னை மாநகராட்சி அலுவலகம். (கோப்புப்படம்)
  • Share this:
கொரோனா பாதிப்பில் நாளுக்கு நாள் புதிய புதிய உச்சத்தை அடைந்து வருகிறது சென்னை. நோய் பரவல் தடுப்பு பணிகளை அரசும், மாநகராட்சியும் மிகத்தீவுரமாக மேற்கொண்டு வருகிறது.

கொரோனா நோய் தொற்று தொடர்பாக மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. தினமும் பலர் டிவிட்டர் வாயிலாக சென்னை மாநகராட்சியிடம் பல சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று வருகின்றனர்.மேலும், தொற்று பாதித்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் தங்களுக்கு தேவையான சிகிச்சை உதவிகளையும் டிவிட்டர் வாயிலாக பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மண்டலம் வாரியாக கட்டுப்பாட்டு அறை எண்களை அறிவித்துள்ளது. இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரிகள் அறிவுறுத்தலின் அடிப்படையில் உடனடியாக சந்தேகங்கள், தேவைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மண்டலம் - எண்:

திருவொற்றியூர் - 044 46556301

மணலி - 044 46556302

மாதவரம் - 044 46556303

தண்டையார்பேட்டை - 044 46556304

ராயபுரம் - 044 46556305

திரு.வி.க. நகர் - 044 46556306

அம்பத்தூர் - 044 46556307

அண்ணாநகர் - 044 46556308

தேனாம்பேட்டை - 044 46556309

கோடம்பாக்கம் - 044 46556310

வளசரவாக்கம் - 044 46556311

ஆலந்தூர் - 044 46556312

அடையாறு - 044 46556313

பெருங்குடி - 044 46556314

சோழிங்கநல்லூர் - 044 46556315

இது தவிர சென்னை மாநகராட்சி தலைமை அலுவகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையையும் 044 46122300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Also read... 6 மண்டலங்களில் தீயாய் பரவும் கொரோனா -சென்னை அப்டேட்

First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading