கொரோனா பாதித்து வீட்டில் தனிமை படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க செயலி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டு இருப்பவர்களை கண்காணிக்கும் செல்போன் செயலியை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிமுகப்படுத்ததினார்.

கொரோனா பாதித்து வீட்டில் தனிமை படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க செயலி
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
  • Share this:
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களை கண்காணிப்பதற்காக செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோல் சிகிச்சை முடிந்து 14 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதனை மீறி சிகிச்சை பெறுபவர்களும் சிகிச்சை முடிந்து வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களும் ஒரு சிலர் வெளியில் சுற்றுவருவதால் அவர்கள் மூலம் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது.


இதனை கட்டுப்படுத்த வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு உதவி செய்வது உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு பணிக்காக 3500 தன்னார்வலர்களை மாநகராட்சி நியமித்துள்ளது. இவர்கள் மூலமாக வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்கள் நடமாட்டத்தை GCC corona monitor என்ற இந்த செல்போன் செயலி மூலம் கண்காணிக்க உள்ளனர்.Also read... உங்களுக்கு கொரோனா பரவாமல் இருக்கனுமா? அசத்தல் ஐடியா கொடுத்த அமைச்சர்

ஜி.பி.எஸ். மூலமாக வீட்டில் தனிமை படுத்தப்பட்டு இருப்பவர்கள் வெளியில் செல்வதை கண்காணிக்க இந்த செயலி பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வீட்டு கண்காணிப்பில் இருக்கும் போது வெளியில் சுற்றுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading