கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்தாரர்களுக்கு தீவிர சோதனை

காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் கிருமி நாசினி மருந்து பயன்படுத்திய பின்னரே தீவிர கண்காணிப்புக்கு பிறகே உள்ளே அனுமதியளிப்படுகின்றனர்.

  • Share this:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் 31 ஆம் தேதி வரை செயல்பட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தெர்மல் ஸ்கேனர் கருவியை பயன்படுத்தி கண்காணிப்பதோடு மட்டுமில்லாமல் பாதுகாப்புக்காக கிருமி நாசினி மருந்தும் தெளிக்கப்படுகின்றது.

அதேபோல காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் கிருமி நாசினி மருந்து பயன்படுத்தி தீவிர கண்காணிப்பு செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் கிருமி நாசினி மருந்து தெளிப்பதை தலைமையக இணை ஆணையர் ஏ.ஜி பாபு பார்வையிட்டார்.

Also see:
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading