தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பு 13,000-க்கும் கீழ் குறைவு... இன்றைய பாதிப்பு நிலவரம்

மாதிரி படம்

 கொரோனா தொற்றினால் ஒரே நாளில்  பேர் 254 பேர்  உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 29,801  ஆக அதிகரித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனாவால் புதிததாக 12,772  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 25,561  பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 254 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  23,66,493 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 25,561 கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,99,808 ஆக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்தாலும் தினசரி உயிரிழப்பு என்பது குறையாமல் 400-க்குதம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது உயிரிழப்பும் குறைந்து உள்ளது.   கொரோனா தொற்றினால் ஒரே நாளில்  பேர் 254 பேர்  உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 29,801  ஆக அதிகரித்துள்ளது.

    கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 1728 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 828 பேருக்கு கொரோனா தொற்றும், 28 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
    Published by:Vijay R
    First published: