தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா... தொடர்ந்து 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த தொற்று

கோப்புப்படம்

தொற்று பாதிப்பால் சென்னையில் 2 பேர் உட்பட ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 12590 ஆக அதிகரித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1200-ஐ கடந்துள்ளது.

   

  தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாளில் புதிதாக 1243 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 65 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

  சென்னையில் அதிகபட்சமாக 458 பேருக்கும், செங்கல்பட்டில் 134 பேருக்கும், கோவையில் 103 பேருக்கும் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூரில் 87, தஞ்சாவூரில் 85, காஞ்சிபுரத்தில் 41, திருப்பூரில் 33 பேருக்கும் தொற்று உறுதியாகியளள்து.

  தொற்று பாதிப்பால் சென்னையில் 2 பேர் உட்பட ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 12590 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 7291 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

  கடந்த டிசம்பருக்குப் பின் கட்டுக்குள் வந்த கொரோனா, தற்போது இரண்டாவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளதால் இரண்டாவது அலை வீசுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
  Published by:Vijay R
  First published: