கொரோனா தொற்று நபர் மாயம்... மருத்துவமனையே டிஸ்சார்ஜ் செய்ததா...? புதிய தகவல்கள்

கொரோனா தொற்று நபர் மாயம்... மருத்துவமனையே டிஸ்சார்ஜ் செய்ததா...? புதிய தகவல்கள்
கோப்பு படம்
  • News18
  • Last Updated: April 9, 2020, 6:52 AM IST
  • Share this:
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து இன்று தப்பி ஓடிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அவர் தப்பி ஒடவில்லை என்றும் மருத்துவமனையே டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில்  இன்று வரை 20 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தொற்று இருந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து அறிகுறிகளுடன் இருந்தவர்கள் இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த டெல்லியைச் சேர்ந்த 30 வயதான நபர் இன்று தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனை அடுத்து, அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் வேலை நிமித்தமாக வந்து, அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அவர் மீண்டும் அங்கே சென்றிருக்கலாம் என்ற தகவல்களின் அடிப்படையில் போலீசார் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், அந்த நபர் தப்பி ஓடவில்லை என்றும் மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விழுப்புரத்தைச் சேர்ந்த மூவர் மற்றும் டெல்லியைச் சேர்ந்த நபர் ஆகிய நால்வருக்கும் இதற்கு முந்தைய பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வெளியாக, 28 நாட்கள் கண்காணிப்பு காலம் நேற்றுடன் முடிவடைய அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் வெளியிடப்பட்ட இரண்டாவது பரிசோதனை முடிவுகளில் அவர்கள் நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதி என்று முடிவுகள் வெளியாகின. இதனை அடுத்து, உள்ளூரைச் சேர்ந்த மூவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், டெல்லியைச் சேர்ந்தவரை தேடும் பணி நடந்துவருகிறது.இரண்டாவது முடிவுகள் வரும் முன்னரே அவர்களை டிஸ்சார்ஜ் செய்தது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading