ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வீட்டிலேயே இருப்பதுதான் எங்களுக்கு நீங்கள் தரும் மரியாதை - கடலூர் காவல்துறை வேண்டுகோள்

வீட்டிலேயே இருப்பதுதான் எங்களுக்கு நீங்கள் தரும் மரியாதை - கடலூர் காவல்துறை வேண்டுகோள்

  • News18
  • 2 minute read
  • Last Updated :

இரவும், பகலும் சாலையிலேயே கிடக்கும் காவலர்கள் நிலைமையை புரிந்துகொண்டு, மக்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கடலூர் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வைரஸ்க்கு எதிராக ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் கேட்டுக்கொண்டன.

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன் காவல் துறையினர், மருத்துவத் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் ஊடகத் துறையினர் என அனைவரும் மக்கள் சேவைக்காகவும் சமுக நலனுக்காகவும் தங்களை அர்பணித்து கொண்டுள்ளனர்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 6 நாட்கள் ஆகியும் மக்கள் அத்தியாவசிய தேவை பொருட்களை வாங்க இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் வெளியே வருகின்றனர்.

வெளியே வரும் மக்களை சாலையில் பாதுகாப்பிற்ககாக காத்திருக்கும் காவலர்கள் தடுத்து நிறுத்தி வீட்டிற்கு சென்று தங்குமாறு அறிவுரைகள் கூறி வருகின்றனர். ஒரு சில இடங்களில் இளைஞர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க செல்வதாக பொய்களை கூறி உலாவிவருகின்றனர். அவர்களை போலீசார் வழிமறித்து, விரட்டியும் எச்சரித்தும் வீட்டிற்கு அனுப்புகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரவு, பகல் பாராமல் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் சமூக அக்கறையை கருத்தில் கொண்டும் வெளியே வரும் மக்களை வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் நகரத்தை பொறுத்தளவில் டிஎஸ்பி சாந்தி தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பல இடங்களில் இரவு, பகல் பாராமல் சாலைகளில் இரவு நேரங்களில் கொசுக் கடிகளிலும் சாலைகளில் உணவுகளை சாப்பிட்டு கொண்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் கடலூர் புதுவை எல்லையான மாநில எல்லைகளிலும், மாவட்ட எல்லைகளிலும் தடுப்பு கம்பிகள் அமைத்து செல்லும் வாகனங்களை தயவு செய்து இனிமேல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கைகூப்பி கேட்டுக்கொண்டு அனுப்புகின்றனர்.

காவலர்களில் பலர் முதியவர்களும், பெண்களும் உள்ளனர். இவர்கள் சாலையில் நின்று கொண்டு சரியான உணவு, முக்கவசம் இல்லாமல் இருப்பதை அறிந்த டிஎஸ்பி சாந்தி காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு இடத்தில் சமைத்து உணவு, டீ, பிஸ்கெட், நிலவேம்பு கசாயம், முக்கவசம் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

காவல் துறையினரில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் பணிகளில் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளார். இருப்பினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு இருந்தால் மட்டுமே தான் காவலர்களின் இந்த சமூக அக்கறையும் தொடரும் என்ற நிலை உள்ளது.

காவலர்களுக்கும், குழந்தைகள் குடும்பம் உள்ளது அதனையும் பொருட்படுத்தாமல் சமுக நலனுக்காக பொதுமக்களை காக்க சாலையில் பாதுகாப்புகாக காத்திருகின்றனர். எனவே பொதுமக்கள் அவர்கள் நிலைமையை புரிந்து கொண்டு அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் கடலூர் மாவட்ட காவல்துறையின் மிக முக்கிய வேண்டுகோளாக உள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் அதுவே காவல்துறையினருக்கு அளிக்கும் மரியாதை என கூறுகின்றனர்.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sankar
First published:

Tags: Cuddalore, Lockdown