முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தருமபுரியில் மகன் திருமணத்தில் பங்கேற்ற ஆசிரியை உட்பட 9 பேருக்கு கொரோன தொற்று

தருமபுரியில் மகன் திருமணத்தில் பங்கேற்ற ஆசிரியை உட்பட 9 பேருக்கு கொரோன தொற்று

மாதிரி படம்

மாதிரி படம்

தருமபுரி மாவட்டத்தில் மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமையாசிரியை உட்பட 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தருமபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க., நகரைச் சேர்ந்த 53 வயதுடைய தலைமையாசிரியை சென்னையிலிருந்து வந்து கடந்த, 10-ம் தேதி, கிருஷ்ணகிரியில் தனது மகனுக்கு திருமணம் செய்துள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து, தலைமையாசிரியரின் உறவினர்கள் வந்துள்ளனர்.

இந்நிலையில், ஊர் திரும்பிய தலைமையாசிரியை மற்றும் அவரது கணவர் இருவருக்கும் மூன்று நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தலைமையாசிரியைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர், தருமபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, நேற்று முன்தினம், திருமணம் மற்றும் அரூரில் நடந்த விருந்தில் பங்கேற்ற குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட, 15 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தலைமையாசிரியையின் கணவர், சித்தி, அவரது அக்கா குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் என மொத்தம் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து திரு.வி.க., நகர் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. அரூர் பகுதியில் கடந்த, மூன்று மாதங்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில், இரண்டு நாட்களில், தலைமையாசிரியை உள்பட 10 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Also read... கோவாவில் கொரோனா பெருந்தொற்றால் முதல் உயிரிழப்பு

இதில் தலைமையாசிரியையின் சகோதரி குடும்பத்தில் 2 சிறுமிகள் உட்பட 7 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணத்தில் பங்கேற்றவர்கள் மூலம், பலருக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளதால், அவர்களுடன் தொடர்புடையவர்களை பரிசோதனை செய்ய நடமாடும் வாகனம் மூலம் மாதிரிகள் எடுக்கப்பட்டது.

மேலும் தொடர்ந்து 3 மாதமாக தொற்று இல்லாத அரூர் பகுதியில் இவர்கள் மூலம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

First published:

Tags: CoronaVirus, Dharmapuri