தமிழகம்: முதியவர்கள், குழந்தைகளிடம் 12% கொரோனா பாதிப்பு...!

பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள்  பெரும்பாலானவர்களுக்கு 13 முதல் 60 வயதினரிடமிருந்து தான் தொற்று வந்துள்ளது.

தமிழகம்: முதியவர்கள், குழந்தைகளிடம் 12% கொரோனா பாதிப்பு...!
(கோப்புப் படம்)
  • Share this:
தமிழகத்தில் இதுவரை முதியவர்கள், குழந்தைகளிடம் 12 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், எதிர்ப்பு சக்தி இயல்பாகவே குறைவாக இருக்கும் குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுமே நோய் தொற்று ஏற்படாமல் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை கூறி வருகிறது.

மற்ற வயதினர் பாதிக்கப்பட்டு அதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து யாரும் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் கூறுகிறது. இந்நிலையில் இது வரை தமிழகத்தில் குழந்தைகள், முதியவர்களிடம் நோய் பரவல் எவ்வளவு இருக்கிறது என பார்க்கலாம்.


தமிழகத்தில் இதுவரை 7,204 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 364 பேர் 12 வயதுக்கு கீழான குழந்தைகள்,  503 பேர் 60 வயதுக்கு மேலானவர்கள். மொத்தம் 867 பேர் ஆவர். இது வரை தமிழகத்தில் ஏற்பட்ட பதிப்புகளில் 12.03% குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.

பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள்  பெரும்பாலானவர்களுக்கு 13 முதல் 60 வயதினரிடமிருந்து தான் தொற்று வந்துள்ளது.  வெளிநாடு சென்று திரும்பிய பிள்ளைகள்,  கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் என பரவியுள்ளது.

தமிழகத்தில் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இது வரை ஏற்பட்ட 867 பாதிப்புகளில் கடந்த 10 நாளில் மட்டும் 473 பேருக்கு ஏற்பட்டுள்ளது.நேற்று மட்டும் 35 குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 49 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தம் - 867

முதியவர்கள் -503

குழந்தைகள்- 364

கடந்த 10 நாட்களில் 473

முதியவர்கள்- 251

குழந்தைகள்- 222


Also see...
First published: May 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading