பயன்பாட்டுக்கு வரும் கொரோனா தடுப்பூசி - சென்னையில் கோவாக்ஸின், மதுரையில் கோவிஷீல்டு
தமிழகத்துக்கு இதுவரை 5,56,500 கொரோனா தடுப்பு மருந்துகள் மத்திய அரசிடமிருந்து வந்துள்ளன.

மாதிரி படம்
- News18 Tamil
- Last Updated: January 15, 2021, 1:27 PM IST
நாளை முதல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டும், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பு மருந்தும் பயன்பாட்டுக்கு வர உள்ளன.
நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. தமிழகத்தில் 166 இடங்களில் முதல் கட்டமாக தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
மதுரையில் தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் , சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பு மருந்தும் பயன்பாட்டுக்கு வர உள்ளன. சென்னையில் 12 இடங்கள், கோவையில் 4 இடங்கள், மதுரையில் 5 இடங்கள், திருச்சியில் 5 இடங்கள், சேலத்தில் 7 இடங்கள் உட்பட 166 அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டும் 6 இடங்களில் கோவாக்சினும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளிலும், போரூர், ஈஞ்சம்பாக்கம், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரானா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்துக்கு இதுவரை 5,56,500 கொரோனா தடுப்பு மருந்துகள் மத்திய அரசிடமிருந்து வந்துள்ளன. இதில் 20 ஆயிரம் மருந்துகள் கோவாக்சின். மீதமுள்ள 5,36,500 மருந்துகள் கோவிஷீல்டு. இந்த தடுப்பு மருந்தில் 5,12,200 மருந்துகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு, 24,300 மருந்துகள் மாநில கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.சென்னையில் எம்.ஜி.எம் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி நாளை போடப்படுகிறது. இதற்கிடையே சென்னையில் மருத்துவக் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களுக்கான ஏற்பாடுகளை மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு இன்று பார்வையிட்டார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. தமிழகத்தில் 166 இடங்களில் முதல் கட்டமாக தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
மதுரையில் தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் , சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பு மருந்தும் பயன்பாட்டுக்கு வர உள்ளன.