தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா இரண்டாம் அலை | corona second wave

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7819 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

 • Share this:
  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வீசிவருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் நள்ளிரவு ஊரடங்கு அமல்படுத்தியிருந்த நிலையில், தற்போது இன்று இரவு 8 மணி முதல்  அடுத்த `15 நாள்களுக்கு மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த வேட்பாளர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் அடுத்தடுத்த கொரோனா நோய்த்தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் கோவிட் -19 தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  தமிழக அரசு மாநிலத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பேருந்தில் 50 சதவிகிதம் பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். திருமண நிகழ்வில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.   இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

  இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டு செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7819 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2564 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரு நாளில் 25 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 54315 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  Published by:Ramprasath H
  First published: