கொரோனா அச்சம்: கைதிகளைச் சந்திக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக சிறைத்துறை

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து தமிழக சிறைத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சம்: கைதிகளைச் சந்திக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக சிறைத்துறை
சிறைக்கைதிகளை சந்திக்க கடும் கட்டுப்பாடு
  • Share this:
கொரோனா அச்சம் காரணமாக சிறைக் கைதிகளைச் சந்திக்க தமிழக சிறைத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக சிறைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறைவாசிகள் சிறையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அவர்கள் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சிறைவாசிகளுக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தி உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.




மேலும் அனைத்து சிறைவாசிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் காய்ச்சல், சளி, இருமல் உள்ள சிறைவாசிகளை தற்காலிக தடுப்பு காப்பு அறைகளை அமைத்து அவர்களை அங்கே அடைக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறைவாசிகளுக்கு சோப்புகள் வழங்கவும் அவ்வப்போது கைகளை கழுவும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவை முறையாக கவனிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகளை வழக்கறிஞர்கள் நேர்காணல் செய்யும் அவசியம் ஏற்படும்போது சிறையினுள் அனுமதிக்கப்படும் முன் வழக்கறிஞர்கள் கைகளை சோப் மூலம் சுத்தம் செய்து கொண்ட பின்னரே அனுமதிக்கவேண்டும் என்றும் வழக்கறிஞர் மற்றும் சிறைக்கைதிகளுக்கு இடையே சுமார் 6 அடி இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வழக்கறிஞர் மற்றும் சிறைவாசி ஆகிய இருவரும் முகக் கவசம் கட்டாயம் அறிந்து இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் தொடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகா, தியானம் போன்றவற்றை தவிர அனைத்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி சம்பந்தமான பார்வையாளர்கள் ஒரு மாத காலத்திற்கு சிறையினுள் அனுமதிப்பது நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப் பணிகளுக்கு செல்லும் சிறைவாசிகளுக்கு முக கவசம் வழங்கப்பட வேண்டுமென்றும் பணி நேரத்தில் உள்ள அனைத்து காவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு முகக் கவசம் வழங்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெரும்பாலான நேரங்களில் சிறைவாசிகளை நீதிமன்றங்களில் நேரில் ஆஜர்படுத்துவதைத் தவிர்த்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see:
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading