Home /News /tamil-nadu /

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... ஒரே நாளில் 14 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... ஒரே நாளில் 14 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

Corona

Corona

குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,23,214 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 66,992 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றிலிருந்து குணம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு கடுமையாக உயரத் தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு, வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டது, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டவை விதிக்கப்பட்டன.

    இதையும் படிங்க - உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியாக உள்ள எஃப்.ஐ.ஆர் படத்தை தடை செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி புகார்

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு மாநிலத்தில் இறங்கு முகமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 4,519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

    நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,971 ஆக குறைந்தது. இந்நிலையில் கடந்த 24 மணிநேர நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 3,592 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து பாதிப்பு இறங்குமுகமாக இருந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,28,068 ஆக உள்ளது.

    இதையும் படிங்க - பாஜக அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதலுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

    குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,23,214 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 66,992 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,862 ஆக அதிகரித்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Corona

    அடுத்த செய்தி