மீண்டும் வேகமாக பரவும் கொரோனா: திருச்சி காந்தி மார்கெட் வியாபாரிகள் 4 பேருக்கு தொற்று உறுதி

மீண்டும் வேகமாக பரவும் கொரோனா: திருச்சி காந்தி மார்கெட் வியாபாரிகள் 4 பேருக்கு தொற்று உறுதி

திருச்சி காந்தி மார்க்கெட்

திருச்சியில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. காந்தி மார்க்கெட் வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 4 கடைகள் மூடப்பட்டன.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த வார தொடக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட அளவில் 10 பேருக்கும் உள்ளாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.


கொரோனாவை தடுப்பதற்காகவும், அதனை கட்டுப்படுத்துவதற்காகவும் திருச்சி மாநகராட்சி சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் வார்டு வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. காந்தி மார்க்கெட் பகுதியில் நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. 



இதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வியாபாரிகள் நடத்தி வந்த 2 காய்கறி கடைகளையும் உடனடியாக பூட்டி சீல் வைத்தனர். மற்ற 2 கடைகள் சாலையோர கடைகள் என்பதால் அவற்றை அப்புறப்படுத்தினர்.




கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த 4 பேரையும் வீட்டில் தனிமையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுரை கூறினார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரும் குடும்பத்துடன் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முகக் கவசம், சமூக இடைவெளி, சானிடைசர் பயன்படுத்தி தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 





உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Vaijayanthi S
First published: