• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் 18,000-க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு... குறையாத உயிரிழப்பு

தமிழகத்தில் 18,000-க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு... குறையாத உயிரிழப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா தொற்றினால் ஒரே நாளில்  பேர் 405 பேர்  உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 28,170  ஆக அதிகரித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனாவால் புதிததாக 17,321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31253 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 405 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  22,92,025  ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 31,253 கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,59,597 ஆக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்தாலும் தினசரி உயிரிழப்பு என்பது குறையாமல் இருந்து வருகிறது.  கொரோனா தொற்றினால் ஒரே நாளில்  பேர் 405 பேர்  உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 28,170  ஆக அதிகரித்துள்ளது.

    கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 2319 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 62 புர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 1345 பேருக்கு கொரோனா தொற்றும், 52 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: