புதிய உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 23,000-த்தைக் கடந்த பாதிப்பு

கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 167 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவருகிறது. அதனால், தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகின்றது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக 20,000-த்தைக் கடந்துள்ளது. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனை பற்றாக்குறை போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழல் தமிழகத்திலும் உருவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  இந்தநிலையில், இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று மட்டும் 1,55,382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 12,72,602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 20,062 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதன்மூலம் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 11,29,512 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 167 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 14,779-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 6,291 பேருக்கும், செங்கல்பட்டில் 1,228 பேருக்கும், கோயம்புத்தூரில் 2,029 பேருக்கும், திருவள்ளூரில் 1,385 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: