தமிழகத்தில் இரண்டாவது நாளாக 20,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இரண்டாவது நாளாக 20,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

கோப்புப் படம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,952 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் இரண்டாவது அலை சுனாமி போன்ற தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

  எனினும், கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் சவாலாக உள்ளது. நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபட்டவர்களின் எண்ணிக்கை 20,000-த்தைக் கடந்துள்ளது. இன்றும் அதேபோல, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 20,000-த்தைக் கடந்துள்ளது.

  கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,41,021 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 20,952 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 12,28,064 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 18,016 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 10,90,338 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.

  இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 122 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 14,468 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 6,150 பேருக்கும், செங்கல்பட்டில் 1,618 பேருக்கும், கோயம்புத்தூரில் 1,566 பேருக்கும், திருவள்ளூரில் 1,207 பேருக்கும், திருநெல்வேலியில் 403 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: