கொரானோ தாக்கம்: திருப்பூருக்குத் திரும்பும் சீனாவின் பின்னாலடை ஆர்டர்கள்... ஆனாலும் சோகம்

கொரானோ தாக்கம்: திருப்பூருக்குத் திரும்பும் சீனாவின் பின்னாலடை ஆர்டர்கள்... ஆனாலும் சோகம்
கோப்பு படம்
  • News18 Tamil
  • Last Updated: February 13, 2020, 10:27 PM IST
  • Share this:
சீனாவில் கொரானோ வைரஸ் தாக்கத்தால், அங்கு செல்ல வேண்டிய ஆர்டர்கள் திருப்பூருக்கு திரும்பினாலும், மூலப்பொருட்கள் இன்றி உற்பத்தி செய்ய முடியவில்லை என தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சீனாவில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ள கொரானோ வைரஸ் தாக்கத்தால், அங்குள்ள பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்கள் மூடிக் கிடக்கின்றன. கொரானோ தாக்குதலுக்கு முன்பு வரை சீனாவுக்கு ஆர்டர்களை கொடுத்து வந்த உலக வியாபாரிகளின் கவனம் தற்போது திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பியுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் பின்னலாடைகளில் சுமார் 55 விழுக்காடு, திருப்பூரில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கு சாயமேற்ற பயன்படும் ரசாயனங்கள் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல், 10 சதவீத பாலியஸ்டர் துணிகள், பட்டன், ஜிப், ஊசி உள்ளிட்ட 20 சதவீதப் பொருட்கள் ஆகியவையும் சீனாவில் இருந்தே இந்தியாவுக்கு இறக்குமதியாகிறது.


இதன் மதிப்பு சுமார் ஆயிரம் கோடி என கூறப்படும் நிலையில், திருப்பூரில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. கொரானோ வைரஸ் தாக்கத்தால், சீனாவுக்கு செல்ல வேண்டிய ஆர்டர்கள் திருப்பூரில் குவிந்தாலும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மூலப்பொருட்கள் இன்றி, பணிகளை செய்ய முடியவில்லை என உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவில் உள்ள மூலப்பொருள் உற்பத்தியாளர்கள், தரத்தை அதிகப்படுத்தினால், எதிர்காலத்திலும் தொழில் சிறக்கும் என்கின்றனர். பின்னலாடைகளுக்கு சாயமேற்ற பயன்படும் H ஆசிட்டை சீனாவில் தயாரிக்கும் ஆலைப் பகுதிகளில் கொரானோ வைரஸ் தாக்கம் இல்லை என்பதால், அங்கிருந்து ஓரிரு வாரங்களில் இறக்குமதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஓரிரு வாரங்களில் H ஆசிட் திருப்பூருக்கு இறக்குமதி செய்யப்படும் என்றும், இதனால், ஆர்டர்களை செய்து தந்து, திருப்பூர் தொழில் மீண்டும் புதுப்பொலிவு பெறும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்