தமிழகத்தில் கொரோனாவால் புதிததாக 11,805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 23,207 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 267 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,78,298 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 23,207 கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,23,015 ஆக உள்ளது.
கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்தாலும் தினசரி உயிரிழப்பு என்பது குறையாமல் இருந்த நிலையில் தற்போது உயிரிழப்பும் குறைந்து உள்ளது.
கொரோனா தொற்றினால் ஒரே நாளில் பேர் 267 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 30,068 ஆக அதிகரித்துள்ளது.
கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 1563 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 793 பேருக்கு கொரோனா தொற்றும், 21 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.