சென்னையில் குறைகிறதா கொரோனா பரவல்? இருமடங்காகும் காலம் அதிகரித்துள்ளதாக மாநகராட்சி விளக்கம்..
சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்தும் நாட்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த போக்கு உலகளாவியது, ஒரு சில விதிவிலக்குகளை குறிப்பாக உயிரியல் வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆய்வின் ஆசிரியர்கள் "உள்ளார்ந்த மற்றும் தகவமைப்பு நோயெதிர்ப்பு அமைப்பு இரண்டிலும் பாலியல் வேறுபாடுகள் முன்னர் தெரிவிக்கப்பட்டன, மேலும் கோவிட் -19ல் பெண்களின் நன்மைக்கு இது காரணமாக இருக்கலாம் " என்று தெரிவித்தனர். பெண்கள் இயற்கையாகவே அதிக வகை I இன்டர்ஃபெரான் புரதங்களை (Type I interferon proteins) உற்பத்தி செய்கிறார்கள். இது சைட்டோகைன் புயல் (Cytokine Storm) எனப்படும் அசாதாரண நோயெதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்துகிறது.
- News18 Tamil
- Last Updated: July 9, 2020, 7:27 AM IST
சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறையத் துவங்கியது. ஜூன் மாதம் சென்னையில் தினசரி 2 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக தினசரி 1200 முதல் 1700 பேருக்கு மட்டும் கண்டறியப்படுகிறது.
சென்னையில் இதுவரை 71230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 47735 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22,374 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்தும் நாட்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
உதாரணமாக, ஜூன் 1 ஆம் தேதி 100 எண்ணிக்கையில் இருக்கும் தொற்று, 200 எண்ணிகையாக மாற 20 நாட்கள் எடுத்துக் கொண்டது எனில், தற்போது அந்த இரு மடங்காகும் காலம் அதிகரித்து வருகிறது. இதன்படி, சென்னை முழுவதும் மார்ச் முதல் ஜூன் 6-ம் தேதி வரையிலான காலத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர 25 நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளது. மண்டல வாரியாக, திருவொற்றியூரில் 26.8 நாட்களும், மணலியில் 27.3 நாட்களும், மாதவரத்தில் 31.7 நாட்களும், தண்டையார்பேட்டையில் 32.7 நாட்களும், ராயபுரத்தில் 57.1 நாட்களும், திரு.வி.க.நகரில் 32.4 நாட்களும், அம்பத்தூரில் 23.2 நாட்களும், அண்ணா நகரில் 27.4 நாட்களும், தேனாம்பேட்டையில் 32.2 நாட்களும், கோடம்பாக்கத்தில் 28.8 நாட்களும், வளசரவாக்கத்தில் 22.2 நாட்களும், ஆலந்தூரில் 20.2 நாட்களும், அடையாறில் 24 நாட்களும், பெருங்குடியில் 29.8 நாட்களும், சோழிங்கநல்லூரில் 22.4 நாட்களும் ஆகின்றது.
இதன் மூலம் சென்னையில் தொற்று பரவல் குறைந்து வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் இதுவரை 71230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 47735 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22,374 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்தும் நாட்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
உதாரணமாக, ஜூன் 1 ஆம் தேதி 100 எண்ணிக்கையில் இருக்கும் தொற்று, 200 எண்ணிகையாக மாற 20 நாட்கள் எடுத்துக் கொண்டது எனில், தற்போது அந்த இரு மடங்காகும் காலம் அதிகரித்து வருகிறது. இதன்படி, சென்னை முழுவதும் மார்ச் முதல் ஜூன் 6-ம் தேதி வரையிலான காலத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர 25 நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் தொற்று பரவல் குறைந்து வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.