CORONA VIRUS AFFECTED TO 4 EMPLOYEES OF PEELAMEDU CENTRAL BANK OF INDIA IN COIMBATORE VAI
கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. பீளமேடு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவை பீளமேடு பகுதியில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் ஊழியர்கள் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக நூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த சூழலில், கோவை பீளமேடு பகுதியில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் நான்கு பேருக்கு அடுத்தடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி அந்த வங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்காக வங்கிக்கு வருபவர்கள் அருகில் உள்ள ஆவாரம்பாளையம் மற்றும் காளப்பட்டி கிளைகளை பயன்படுத்திக்கொள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1500ஐ நெருங்கியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.