தமிழகத்தில் மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாடு.. பொதுமக்கள் அவதி

தடுப்பூசி

தடுப்பூசி கையிருப்பில் இல்லாத காரணத்தால், கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிறப்பு முகாம்களில் பணி நிறுத்தப்படுகிறது.

 • Share this:
  சென்னை, திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி செலுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

  கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்வதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதே வேளையில், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பல்வேறு முகாம்கள் செயல்படாத சூழல் உருவாகியுள்ளது. அதன்படி சென்னை மற்றும் திருச்சி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி செலுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  தடுப்பூசி கையிருப்பில் இல்லாத காரணத்தால், கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிறப்பு முகாம்களில் பணி நிறுத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்திலும் இதே நிலை தொடர்கிறது. கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதனிடையே மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் தற்போது 3 லட்சத்துக்கு 42 ஆயிரத்து 820 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளன.

  கையிருப்பு உள்ள தடுப்பூசிகள் 20.07.2021 அன்று மதியம் வரை மட்டுமே வரும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். எனவே நாளை பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பாட வாய்ப்புள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: