தமிழகத்தில் முதன்முறையாக ஒரேநாளில் 20,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

மாதிரி படம்

தமிழகத்தில் முதல் முறையாக இன்று ஒரே நாளில் 20,032 பேருக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் இன்று தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் 20,032 பேருக்கு நோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இதில் 1,154 பேர் இரண்டாவது தவணையாக கொரோனா தடுப்பூசி இன்று போட்டுக் கொண்டனர். மற்ற 18,878 பேர் முதல்முறையாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சராசரியாக ஒரு நாளுக்கு 8,000 பேர் தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டு வந்த நிலையில் இன்று ஒரே நாளில் புதிதாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

  சென்னையில் 3,730 பேர் வேலூர் மாவட்டத்தில் 1,195 பேர், கோவையில் 1,203 பேர் மதுரையில் 1,077 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சுகாதார பணியாளர்கள் 12,284 பேர், முன் களப்பணியாளர்கள் 3,351, காவல்துறையினர் 4,397 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். இந்த தடுப்பூசி 628 மையங்களில் இன்று போடப்பட்டது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: