• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாடு முழுவதும் 50,000 மையங்களில் சிறப்பாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு முழுவதும் 50,000 மையங்களில் சிறப்பாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

தமிழ்நாடு முழுவதும் எட்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், 15.16 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

  • Share this:
    மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்ற முகாமில், அதிகபட்சமாக 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. வாரந்தோறும் முகாம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் தொடர் மழை காரணமாக தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் மாநிலம் முழுவதும் எட்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டன. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம் நடைபெற்ற நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

    இந்நிலையில் சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர். முன்னதாக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் பாதை குறுகியதாக இருந்ததால், அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் அமர்ந்து பயணம் செய்தனர்.

    இதனைதொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு மருத்துவத்துறை வரலாற்றில் 6 ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது பெரிய சாதனை என்று குறிப்பிட்டார்.

    புதுக்கோட்டை நகர்ப்பகுதியின் 25 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி சுகாதாரப் பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் எம்.எல்.ஏ முருகேசன் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வீடு வீடாக சென்று தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்த எம்.எல்.ஏ மக்களை வீட்டுவாசலிலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வைத்தார். இதேபோன்று தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: