மாநிலங்களுக்கான கொள்முதல் விலை அதிகம்: மத்திய அரசே தடுப்பூசிகளை வழங்கவேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மாநிலங்களுக்கான கொள்முதல் விலை அதிகம்: மத்திய அரசே தடுப்பூசிகளை வழங்கவேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மாநிலங்களுக்கான தடுப்பூசிகளின் கொள்முதல் விலை அதிகமாக இருப்பதால் மத்திய அரசே தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு வழங்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

 • Share this:
  தடுப்பூசி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘மூன்றாவது கட்டமாக கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை புதிய கொள்கையை அறிவித்துள்ளது. இந்தக் கொள்கையின்படி, மாநில அரசுகளே நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து 18 முதல் 45 வயதுக்குட்பட்ட மக்களுக்கு போட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் மாநில அரசுகள் கொள்முதல் செய்யப்படவேண்டியுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு இந்திய அரசு செலுத்தும் விலையைவிட மாநில அரசுகளுக்கு தடுப்பூசியின் விலை அதிகமாக உள்ளது.

  சில உற்பத்தியாளர்கள் ஏற்கெனவே, மாநில அரசுகள் கொள்முதல் செய்வதற்கு அதிகவிலையை அறிவித்துள்ளனர். இத்தகைய மாறுபட்ட விலை என்பது சாதாரணமாகவே நியாயமற்றது. மாநிலங்களுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தும். ஏற்கெனவே மத்திய அரசை விட மாநில அரசுகள் குறைவான நிதி ஆதாரங்களைக் கொண்டிருக்கும்போது இது அநீதியானது. 2021-22-ம் ஆண்டுக்கான கொரோனா தடுப்பூசி திட்டத்துக்காக 35,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும்போது, கொரோனா தடுப்பூசி மூன்றாவது கட்டத்துக்கு தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்ப்பது இயல்பானது.

  இந்தச் சூழ்நிலையில், 18-45 வயதுக்குட்பட்ட அனைவருக்குமான தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: