ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புறநகர் ரயில்களில் தடுப்பூசி சான்றிதழ் அவசியம்: பயணிகள் அவதி

புறநகர் ரயில்களில் தடுப்பூசி சான்றிதழ் அவசியம்: பயணிகள் அவதி

தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

ரயில்களில் 50% பயணிகள் மட்டுமே அனுமதி என்ற நிலையில் புறநகர் ரயில் சேவையை அதிகரித்து அலுவலக நேரத்தில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை புறநகர் ரயில்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும் என விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர்.  அலுவலக நேரத்தில் ரயில் சேவையை அதிகரித்து 12பெட்டிகள் ரயில்களை இயக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  தமிழகத்தில் மீண்டும் சுனாமி வேகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை புறநகர் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் ரயில் பயணிகளுக்கும் தென்னக ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

  சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்,பயணசீட்டு மற்றும் மாதாந்திர பாஸ் பெறும் போது கட்டாயம் 2டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும், செல்போன் செயலி மூலமாக பயணச்சீட்டு பெறும் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு போன்ற விதிகள் தமிழகம் முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ளது.

  இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் அதிகாரிகள் குழுவினர் ரயில் நிலைய நுழைவாயிலில் நின்று பயணிகளின் தடுப்பூசி சான்றுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பயணச்சீட்டு எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். இரண்டு தவணை செலுத்தியிருந்தாலும் அதற்கான சான்று வைத்திருக்காதவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

  இதையும் படிங்க: ஊரடங்கு அச்சம்: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் திருப்பூர் வடமாநில தொழிலாளர்கள்

  இதனால் 2டோஸ் தடுப்பூசி செலுத்தியும் அதற்கான சான்று இல்லாதவர்கள், அலுவலகம் செல்வோர் கடும் அவதிக்கு ஆளாயினர். சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் குறித்த நேரத்தில் ரயில்களை இயக்க வேண்டும் எனவும், 50% பயணிகள் மட்டுமே அனுமதி என்ற நிலையில் ரயில் சேவையை அதிகரித்து அலுவலக நேரத்தில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

  இதையும் படிங்க: Booster Dose: கொரோனா பூஸ்டர் தடுப்பூசி - பொதுமக்கள் ஆர்வம்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Corona safety, Cowin, Railway