Home /News /tamil-nadu /

இன்றைய கொரோனா தடுப்பூசி முகாமில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம்: அமைச்சர் தகவல்

இன்றைய கொரோனா தடுப்பூசி முகாமில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம்: அமைச்சர் தகவல்

மா. சுப்பிரமணியன்

மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் 5,55,634 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள். இதில், 1,84,285 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் இன்று 19வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில், பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த தகுதி வாய்ந்தவர்களும் தடுப்பூசியை  செலுத்திக்கொள்ளலாம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் வாரம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த முகாம் நடைபெற்று வந்தன. பின்னர் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை தொடர்ந்து சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாமும், வியாழக்கிழமை பூஸ்டர் தடுப்பூசி முகாமும் நடைபெற்று வருகின்றன.

    அதன்படி, தமிழகத்தில் இன்று 19வது கொரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகின்றன. சென்னை ஐஐடியில் வளாகத்தில் நடைபெற்றுவரும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், முதல் தவணை - இரண்டாம் தவணை, 15 வயது முதல் 18 வயதானவர்களுக்கான தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி ஆகிய மூன்று வகையாக தடுப்பூசி போடப்படுகிறது.

    முன்களப் பணியாளர்கள், 60 வயதை கடந்தவர்கள் ஆகியோர் இன்றும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம். . 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    இதையும் படிங்க: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 2.0: கர்நாடக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்


    தமிழகத்தில் 5,55,634 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள். இதில், 1,84,285 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 1,71,616 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதித்த 6 சதவிகிதம் பேர் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மீதம் உள்ள 94 சதவிகிதம் பேர் வீட்டுத்தனிமையில் இருந்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

    2,580 ஊராட்சிகளில் 100 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 94.19 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 74.11 சதவிகிதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். சென்னையில் 38,850 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

    மேலும் படிங்க: ஞாயிறு முழு ஊரடங்கில் ஆட்டோக்கள் இயங்கும் : தமிழக அரசு அறிவிப்பு


    மேலும் 21 மாநகராட்சிகளில் 100 சதவிகிதம் தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பதாக தெரிவித்த அமைச்சர். உருமாற்றம் அடைந்த கொரோனா உள்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை உண்டு என தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona, Corona Vaccine, Ma subramanian

    அடுத்த செய்தி