• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் 2 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கொரோன தடுப்பூசி

தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் 2 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கொரோன தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய மார்க்கெட் என அழைக்கப்படுகிறது  தாராசுரம் காய்கறி மார்க்கெட்....

  • Share this:
    தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்றால் கும்பகோணம் அருகே இயங்கி வரும் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில்  2 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    கும்பகோணம் அருகே தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய மார்க்கெட் என அழைக்கப்படும்  தாராசுரம் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதில், 450 பெரிய கடைகளும், 500-க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் உள்ளன. இந்த மார்கெட்டை வாழ்வாதாரமாகக் கொண்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இங்கு தினந்தோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 300 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. தினமும் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடக்கும்.
    இந்நிலையில் கடந்தாண்டு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறி கொண்டு வந்த டிரைவர்கள் மூலம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரவியது.

    இதன் காரணமாக பல மாதங்கள் தாராசுரம் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது.  பின்னர் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது.
    கொரோனா அச்சம் குறைந்து பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பும் இந்த வேளையில் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    Must Read : தடுப்பூசி போட்டால் பாதிப்பு வராது என்று அலட்சியம் கூடாது; கொரோனா 2-வது அலை தீவிரமாக இருக்கும்- எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை

     

    கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்க்கெட் மூடப்பட்டதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு தாராசுரம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் மீண்டும் கொரோனா தொற்றால் தொழிலாளர்கள் பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தாராசுரம் மார்க்கெட்டில் பணிபுரியும் 2000 தொழிலாளர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: