• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா தடுப்பூசி செலுத்தாமலேயே செலுத்தியதாக சான்றிதழ்: கள்ளக்குறிச்சி இளைஞர் அதிர்ச்சி

கொரோனா தடுப்பூசி செலுத்தாமலேயே செலுத்தியதாக சான்றிதழ்: கள்ளக்குறிச்சி இளைஞர் அதிர்ச்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு போட்டதாக சில நேரங்களில் தவறு ஏற்படலாம் என்று விளக்கமளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தகவல்களை தெரிவித்தால் உடனே திருத்திக் கொள்ள முடியும் என கூறினார்.

  • Share this:
கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கொரோனா முதல் தவணை தடுப்பூசியை மட்டுமே செலுத்திய நிலையில், இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டதாக சான்றிதழ் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்  முத்துக்குமரன்(25) . அவர் ஜூலை 26ஆம் தேதி கிள்ளியூரில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி கொண்டுள்ளார். அதற்கான சான்றிதழ் சரியான விவரங்களுடன் கிடைக்கப்பெற்றுள்ளது. அவருக்கு இரண்டாவது டோஸ் அக்டோபர் 18 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 15ஆம் தேதிக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 25-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆசனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முத்துக்குமரன் தனது இரண்டாவது டோஸ் வெற்றிகரமாக செலுத்தி கொண்டதாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் அவர் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் பதிவிறக்கம் ஆனது. அந்த சான்றிதழில் அவரது முதல் டோஸ் செலுத்திய தேதி சரியாக உள்ளது. ஆனால் அவர் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளாமலே அவர் செலுத்தியததாக சான்றிதழில் உள்ளது.

அவர் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டதாக சொல்லப்பட்டும் அக்டோபர் 25ம் தேதி அவர் சென்னையில் இருந்ததாக முத்துக்குமரன் நியூஸ்18க்கு தெரிவித்துள்ளார். "ஆசனூர் என்பது என் கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர். அங்கு அக்டோபர் 25ம் தேதி நான் சென்று இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டதாக சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நான் சென்னையில் பணியில் இருந்தேன். நான் எப்படி தடுப்பூசி செலுத்தியிருக்க முடியும்?. என் குடும்பத்தினருக்கு இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்வதற்கான தேதி இன்னும் வரவில்லை. " என்கிறார்.


அவர் பணியாற்றும் இந்திய விழிப்புணர்வு இயக்கத்தில் விசாரித்த போது அக்டோபர் 25ம் தேதி அவர் சென்னையில் தான் இருந்தார் என்பதை வெற்றிவேல் என்பவர் உறுதி செய்துள்ளார்.இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, " தகவல்களை பதிவேற்றம் செய்யும் போது இது போன்ற தவறுகள் ஏற்படக்கூடும். போடாதவர்களுக்கு போட்டதாகவும், போட்டவர்களுக்கு இன்னும் போடாததாகவும் சில நேரங்களில் தவறு ஏற்படலாம். செல்போன் எண் தவறாக பதிவு செய்வதாலும் இது போன்ற பிழை ஏற்படலாம். சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உரிய தகவல்களை தெரிவித்தால் உடனே திருத்திக் கொள்ள முடியும்" என்றார்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: