Home /News /tamil-nadu /

தமிழகத்தில் ஒரே நாளில் 6,983 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 6,983 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

Corona update | தமிழ்நாட்டில் நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,28,736 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 6,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதன்மூலம் மொத்த பாதிப்பு 27,67,432 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 721 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து 22,828 பேர் உள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 36,825 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 3,759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus, Omicron

    அடுத்த செய்தி