Corona Virus Update : 4000த்தை நெருங்கிய கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்

Corona Virus Update : 4000த்தை நெருங்கிய கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்

கொரோனா

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

  • Share this:
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 4000த்தை நெருங்கியது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,959 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில்1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இன்று 1,824 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 3,645 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரேநாளில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,15,000த்தை கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும் போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்


கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த மார்ச் -31ல் 72,330 பேருக்கும், ஏப்ரல் ஒன்றாம் தேதி 81 ஆயிரத்து 466 பேருக்கும் தொற்று உறுதியானது. ஏப்ரல் இரண்டாம் தேதி 89,129 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. ஏப்ரல் 4-ம் தேதி இதுவரை இல்லாத அளவாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,03,558 ஆக பதிவானது. ஏப்ரல் 5-ம் தேதி 96,982 ஆக தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையில், நேற்று 1,15,000 த்தை தாண்டியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, மகாராஷ்டிரா, டெல்லி, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால், மகராஷ்டிராவில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால், அண்டை மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் பெற, மத்திய அரசு உதவ வேண்டும் என மகாராஷ்டிரா அரசு கோரிக்கை வைத்துள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸின் 4-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், காரில் தனியாக செல்பவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 70 லட்சத்தை கடந்துள்ளது. மக்கள் அனைவருக்கும் ஏன் தடுப்பூசி போடக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பி வரும் நிலையில், கொரோனா மரணங்களை தடுக்க வேண்டும், முன்கள பணியாளர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும் தற்போது தடுப்பூசி போடப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். மக்களின் விருப்பத்திற்காக தடுப்பூசி போட முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published: