• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கான கொரோனா சிகிச்சை கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  • Share this:
தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் அரசால் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனாதொற்று குறைந்து வரும் நிலையில், சிகிச்சைக்கான கட்டணத்தை குறைத்து மாற்றியமைக்கப்பட்ட கட்டண விவரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தீவிரமில்லாத ஆக்ஸிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.3,000, தீவிரமில்லாத ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு ரூ.7,000, வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 என்று கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள கட்டணம், 2 மாதங்களுக்கு பின் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: