தமிழகத்தை மிரட்டும் கொரோனா: ஒரே நாளில் 15,659 பேருக்கு தொற்று உறுதி!

கோப்புப் படம்

இன்று ஒரே நாளில் 11,065 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்,

  • Share this:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரேநாளில் 15,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 14,842 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,”தமிழகத்தில் புதிதாக 15,659 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாகாக 4206 பேருக்கும் செங்கல்பட்டில் 1242 பேருக்கும் கோவையில் 1038 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,81,988 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக சிகிச்சை பெற்று வருகின்றவர்களின் எண்ணிக்கை 1,05,180 ஆக அதிகரித்துள்ளது இதில் . சென்னையில் மட்டும் 31535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 82 பேர் உயிரிழந்ததையடுத்து, இதுவரை நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,557 ஆக உயர்ந்தது.

மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் இன்று ஆண்கள் 9,469 பேர், பெண்கள் 6,190 பேர்.

இன்று மட்டும் 1,26,298 பேருக்கு RT-PCR சோதனை நடைபெற்றுள்ளது, இதுவரை 2,20,06,472 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இன்று ஒரே நாளில் 11,065 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,63,251 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை (திங்கள்கிழமை 26.04.21) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: