தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு கொரோனா பரிசோதனை

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு கொரோனா பரிசோதனை

பிரேமலதா விஜயகாந்த்

விருதாச்சலம் நகர்ப்புற பகுதிகளில் முரசு சின்னத்திற்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரேமலதா வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

  • Share this:
    விருத்தாசலம் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு ஆரம்ப சுகாதார நிலைய, சுகாதார மருத்துவ துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது தேமுதிக. அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 18ஆம் தேதி அவரின் சகோதரர் எல்.கே.சுதீஷ்வுடன் வந்து, விருத்தாசலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    அதனைத் தொடர்ந்து, கடந்த 20 ஆம் தேதி முதல் விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அதன்படி, ஐந்தாம் நாளான இன்று விருதாச்சலம் நகர்ப்புற பகுதிகளில் முரசு சின்னத்திற்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரேமலதா வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

    இந்நிலையில், தேமுதிக துணை செயலாளர் சுதீஸ்க்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, சுகாதார துறை உத்தரவின்பேரில் சுகாதார துறையினர் இன்று விருதாச்சலம் காந்திநகர் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் முன்னிலையில், பிரேமலதா விஜயகாந்த் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

    அதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர், பிரேமலதா தங்கியுள்ள தனியார் பள்ளி விடுதி கட்டிடத்தில் கொரோணா பரிசோதனை செய்தனர். இதனால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கொரோனா பரிசோனை எடுத்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என சுகாதாரதுறை மருத்துவர்கள் கூறியுள்ளனர். 3 நாட்களுக்கு பிறகு ரிசல்ட் வரும் என்று கூறியுள்ளனர்.

    இந்நிலையில், தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் இன்று கும்மிடிப்பூண்டி, திருத்தணி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Must Read : 1 கோடி ரூபாய் பறிமுதல்: எம்.எல்.ஏ. கார் ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் கைது

     

    தமிழகத்தில் கொரோன பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்தல் பணிகளில் ஈடுபடுமாறு அரசியல் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: