தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சட்டமன்ற முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் உரையாற்றுவது மரபு. அந்த வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த கூட்டம் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை வளாகத்தில் நடைபெறும் என்று முன்பே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மீண்டும் சில தளர்வுகள் குறைக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள இருக்கைகளில் சமூக இடைவெளி விட்டு அமைப்பது சிரமம் என்பதால், இந்தாண்டும் அவை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அவை நிகழ்ச்சிகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள், சட்டசபை ஊழியர்கள் அனைவரும் கட்டாய பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கொரோனா பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அவரவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
Read More : தமிழக வளர்ச்சிக்கு பா.ஜ.க ஆக்கப்பூர்வமாக இருக்கவேண்டும் - அமைச்சர் சேகர் பாபு
அத்துடன், பத்திரிகையாளர்கள், அவை ஊழியர்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இன்றும் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டம் - இன்று தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரையொட்டி, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 5ஆம் தேதி மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Omicron, TN Assembly