Corona Tamilnadu | திருப்பூரில் ஒரே நாளில் 647 பேருக்குக் கொரோனா- மொத்த பாதிப்பு 33 ஆயிரத்தைக் கடந்தது

கொரோனா வைரஸ்

திருப்பூரில் ஒரே நாளில் 647 பேருக்குக் கொரோனா தொற்று பாதித்துள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 180-ஆக உயர்ந்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில் திருப்பூரில் ஒரே நாளில் 647 பேருக்குக் கொரோனா தொற்று பாதித்துள்ளது.

    தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 180-ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 250 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 602-ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 314-ஆக உள்ளது. இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 3 பேர் நேற்று பலியாகினர்.

    கடந்த சில நாட்களாக நாள் ஒன்றின் பாதிப்பு 500 என்ற அளவிற்கு இருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை தினமும் புதிய புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

    திருப்பூரை சேர்ந்த 54 வயது பெண் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானதாகவும் அதே போல் திருப்பூரை சேர்ந்த 66 வயது ஆண் ஒருவரும் கோவையில் உள்ள மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும், திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் மதுரையில் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நேற்று வரை 12,79,658 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 293 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 16,471 பேராக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 7,564 பேருக்கும், செங்கல்பட்டில் 2,670 பேருக்கும், கோயம்புத்தூரில் 2,636 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,076 பேருக்கும், மதுரையில், 1,172 பேருக்கும், திருவள்ளூரில் 1,344 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Muthukumar
    First published: