முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா: சென்னையில் 5,000-த்தைக் கடந்த பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா: சென்னையில் 5,000-த்தைக் கடந்த பாதிப்பு

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு.. அதிகரிக்கும் விழிப்புணர்வு..

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு.. அதிகரிக்கும் விழிப்புணர்வு..

Corona Virus | தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Last Updated :

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,38,745 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 27,87,391 ஆக அதிகரித்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து 40,260 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் 1,525 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 36,843 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 185 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 179 பேர் ஒமிக்ரான் பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாளை முழு ஊரடங்கு... என்ன இயங்கும்? என்ன இயங்காது?

 சென்னையில் மட்டும் 5,098 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, செங்கல்பட்டில் 1,332 பேருக்கும், கோயம்புத்தூரில் 585 பேருக்கும், திருவள்ளூரில் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: CoronaVirus, Lockdown