Home /News /tamil-nadu /

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - அமைச்சர் அறிவிப்பு

மாதிரிபடம்

மாதிரிபடம்

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போடப்படுவதால் வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 2731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 674 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளனர்.

    சென்னையில் தான் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் 1489 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டில் 120 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் உடன் நேற்றும் இன்றும் ஆலோசனை நடத்தினார். இதில் வார இறுதி நாட்களில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, கடைகளின் நேரத்தை குறைப்பது குறித்து ஆலோசனை நடைப்பெற்றது. இதையடுத்து விரைவில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Also Read : வேகமெடுக்கும் கொரோனா: குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரில் 67 பேருக்கு தொற்று உறுதி

    இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.  மேலும் ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு போடப்படுவதால் வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தோறும் நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். வழிபாட்டுத் தளங்களில் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அரசிடமிருந்து விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Lockdown

    அடுத்த செய்தி