கொரோனா பரவல்: கோவை மற்றும் திருப்பூரில் விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள்.. வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்

கொரோனா பரவல்: கோவை மற்றும் திருப்பூரில் விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள்.. வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், கோவை மற்றும் திருப்பூரில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

 • Share this:
  தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்து வந்ததை அடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன.  ஆனால், கடந்த சில நாட்களாக தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.  அண்டை மாநிலமான கேரளாவிலும், தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது. அம்மாநிலத்தை ஒட்டியுள்ள கோவையில், தினசரி பாதிப்பு தொடர்ந்து 200 ஆக பதிவாகி வருகிறது.

  இதன் காரணமாக, கடந்த 2ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  கடைகள், வணிக வளாகங்கள், தேநீர் மற்றும் இறைச்சி கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

  Also read: உள்ளாட்சி தேர்தல்: நூறு சதவீதம் வெற்றியை உறுதி செய்ய திமுக அமைத்த வியூகம் இதுதான்..

  கேரளாவில் இருந்து வருவோர் 13 சோதனைச் சாவடிகளில் பரிசோதனைக்குப் பிறகே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

  இந்நிலையில், ஞாயிற்றுகிழமைகளில் கோவை மாவட்ட நிர்வாகம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வணிக வளாகங்கள், நூறடி சாலை, கிராஸ் கட் சாலை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

  ஆடி அமாவாசையை ஒட்டி கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.  புதிய கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளதால் 100 அடி சாலை, மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது.  மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிந்தோருக்கு, அபராதம் விதிக்கப்பட்டது.

  தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் விதமாக வார இறுதி நாட்களில், 46 பகுதிகளில் 20 ஆயிரம் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மாநகராட்சியின் 33 இடங்கள், பல்லடத்தில் ஒரு பகுதி, தாராபுரம், மற்றும் உடுமலையில் தலா 6 என மொத்தம் 46 இடங்களில,  அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  இதனால் அப்பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

  இதனிடையே, சில பகுதிகளில் நகை மற்றும் துணிக்கடைகள் பாதி கதவை திறந்து வைத்தும்,  பின் பகுதி வழியாகவும் வியாபாரத்தில் ஈடுபட்டன.  தகவலறிந்து வந்த சுகாதரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
  Published by:Esakki Raja
  First published: