சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் யானைக்கால் நோயாளிகளுக்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவித்தொகை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உதவித்தொகை 2010ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
இன்று நான்காம் நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் 100 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8023 பேர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கை, கால்களை கழுவுவது மிக அவசியம். அதற்கான செயல்முறை இன்று காண்பிக்கப்பட்டுள்ளது.
யானைக்கால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதால் நோய் பரவாது. நோயாளிகளை கடித்த கொசு மற்றவரை கடிக்கும் போது தான் நோய் பரவும்.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக 100க்கும் கீழ் நோய் கொரோனா பாதிப்பு ஒரு நாளில் பதிவாகிறது. கேரளா, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரும் மாணவர்கள் மூலம் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் தொற்று பரவுகிறது. அண்ணா பல்கலையில் 23 பெருக்கு தொற்று உள்ளது.
விஐடியில் 5,600 பேர் உள்ளனர். 80% பேர் வட மாநிலத்திலிருந்து வந்தவர்கள். 12, 13 ஆகிய தேதிகளில் நோய் பரவ தொடங்கி நேற்று வரை 118 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மேலும் 45 பேருக்கு என மொத்தம் 163 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
மேலும் 1500 பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. இன்னும் பத்து நாட்களில் அனைவரும் குணமடைந்து விடுவார்கள். ஐ ஐ டி மற்றும் சத்ய சாய் கல்லூரியில் மாணவர்கள் குணமடைந்து விட்டனர். இதே போல் விஐடியும் கட்டுக்குள் வரும். விஐடி மாதிரிகள் மரபணு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது வரை சத்ய சாய், ஐ ஐ டி, அண்ணா பல்கலையில் பெரும்பாலும் BA2 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
ஒருவருக்கு மட்டும் BA3 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. வரும் 12ம் தேதி ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Covid-19, Ma subramanian