தமிழகத்தில் தீயாய் பரவும் கொரோனா.. கடந்த 17 நாட்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் தீயாய் பரவும் கொரோனா.. கடந்த 17 நாட்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

கோப்புப் படம்

தமிழகத்தில் கடந்த 17 நாட்களில் சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றால் 333 பேர் பலியாகி உள்ளனர்.

 • Share this:
  கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு, நாடு முழுவதும் உச்சத்தில் உள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நோய் தொற்று வேகமாக பரவும் சூழலில், ஏப்ரல் 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை, 91238 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8490 ஆக இருந்தது.

  ஏப்ரல் 1ம் தேதி ஒரே நாளில் 2817 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகினர். ஏப்ரல் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை, 37000 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா தொற்று மேலும் வேகமெடுத்த நிலையில், ஒவ்வொரு நாளும் 6000 பேர் பாதிக்கப்பட்டனர். ஏப்ரல் 14ம் தேதி 7000 பேரும், ஏப்ரல் 16ம் தேதி 8000 பேரும், 17ம் தேதி 9000க்கு மேற்பட்டோரும் நோய் தொற்றுக்கு ஆளாகினர்.

  மேலும் படிக்க... வேகமெடுக்கும் கொரோனா: ரெம்டெசிவர் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை

  இதேபோல், சென்னையிலும் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது. ஏப்ரல் 1ம் தேதி வரை இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 17 நாட்களில் புதிதாக 30184 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: